Sri Lanka Navy – Official Logo

சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

19 May 2026

2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கல்பிட்டியவின் தலவில கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் இருப்பு கைப்பற்றப்பட்டன.

அதன்படி, கல்பிட்டியவின் கடலோரப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தெட்டு (28) சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன. சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சுமார் நானூற்று அறுபத்தாறு (496) கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் (ஈரமான எடை), ஆறாயிரம் (6000) வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுகள், ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு (1958) அழகுசாதனப் பொட்டலங்கள், பூச்சிக்கொல்லி திரவம் நிரப்பப்பட்ட ஆயிரத்து நூற்று நாற்பத்தாறு (1146) போத்தல்கள் மற்றும் பதினைந்தாயிரத்து நூற்று எண்பது (15180) பொதிகளை கடற்படை கைப்பற்றியது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், கடல் மார்க்கமாக பொருட்கள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பைக் கண்காணித்து, ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Accessibility Tools